மீண்டும் மக்களின் ஆதரவை பெற்றதில் மகிழ்ச்சி: பிரதமர் மோடி பெருமிதம்

மகாராஷ்டிரா மற்றும் அரியானாவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மக்களின் ஆதரவை மீண்டும் பெற்றதில் மகிழ்ச்சி அடைந்துள்ளோம் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.



புதுடெல்லி:

 

மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களில் கடந்த 21ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்றது. இதில் முதலில் இருந்தே பாஜக முன்னிலை வகித்து வந்தது.

 

மகாராஷ்டிராவில் 150க்கு மேற்பட்ட இடங்களில் பாஜக - சிவசேனா கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.

 


ஆனால், அரியானாவில் பாஜக 40 இடங்களில் வெற்றி பெற்றாலும் பெரும்பான்மை பெறவில்லை. இதனால் பாஜக - காங்கிரஸ் இடையே ஆட்சியை பிடிப்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது.

 

இந்நிலையில், மகாராஷ்டிரா, அரியானாவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மக்களின் ஆதரவை மீண்டும் பெற்றதில் மகிழ்ச்சி அடைந்துள்ளோம் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

 

இதுதொடர்பாக மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,  மகாராஷ்டிரா, அரியானாவில் மீண்டும் மக்களின் ஆதரவை பெற்றதில் மகிழ்ச்சி. மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களின் வளர்ச்சிக்காக எங்களின் பணி தொடரும்.

 

இரு மாநிலங்களிலும் தேர்தலுக்காக பாடுபட்ட பாஜக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களின் கடின உழைப்புக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.